Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது: நிதி அமைச்சர்

மார்ச் 18, 2022 10:51

சென்னை: வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

* திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்.

* மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

* மத்திய, மாநில நிதி உறவுகளை வழி நடத்த சிறப்பு ஆலோசனை குழு.

* தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இந்த அண்டு ரூ.7000 கோடி குறைய உள்ளது. 2014-ல் இருந்து வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

* சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்