Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது: குலாம் நபி ஆசாத்

மார்ச் 21, 2022 10:53

ஜம்மு: காஷ்மீரில் 1990ம் ஆண்டு பாக்.,ல் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளால் அனைத்து மதத்தினருமே தாக்கப்பட்டனர் என குலாம் நபி ஆசாத் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஜம்மு சிவில் சொசைட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' படம் குறித்துப் பேசினார். முன்னதாக இந்த படத்தை பாராட்டிய பாஜ., முக்கிய தலைவர்கள் 1990-ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் எவ்வாறு மாநிலத்தை விட்டு வெளியே விரட்டியடிக்கப்பட்டனர் என்று தத்ரூபமாக படம் பிடித்ததாக தெரிவித்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் படக்குழுவை பாராட்டி இருந்தனர்.

இதுகுறித்துப் பேசிய குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தில் அப்போது ஈடுபட்டனர். இதனால் ஹிந்துக்கள் மட்டுமல்லாமல் காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பலரும் விரட்டியடிக்கப்பட்டனர் என பேசினார்.

இந்த சம்பவத்தை மதகலவரம் ஆக்கவேண்டாம் என்று பாஜ.,வுக்கு மறைமுகமாக அறிவுறுத்திய அவர் பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்