Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5-ம் கட்ட வாக்குப்பதிவு : தற்போதைய நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவு

மே 06, 2019 11:27

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள்  காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ, சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடந்து வரும் 7 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த 7 தொகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மேற்குவங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவுரா தொகுதியில் 289, 291, 292 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் நீண்ட நேரம் ஓட்டுப்பதிவு தொடங்காமல் இருந்தது. மாற்று எந்திரங்கள் வந்த பிறகே ஓட்டுப்பதிவு தொடங்கியது.

லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காலை 7.30 மணியளவில் சென்று வாக்களித்தார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 51 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா சாதனை படைத்திருந்தது. 

மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தன் மனைவி காயத்ரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய மந்திரியும் ஹசாரியாபாக் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்டில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோ மாண்டிசோடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 11.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜார்க்கண்டில் 13.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கோடர்மா தொகுதியில் 11.94 சதவீதம், ராஞ்சியில் 15.69 சதவீதம், குந்தியில் 12.85 சதவீதம், ஹசாரியாபாத்தில் 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

பீகார் மாநிலத்தில் 11.51 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 9.82 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 12.97 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 8.4 சதவீதமும், ராஜஸ்தானில் 13.24 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 0.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

10 மணி நிலவரப்படி, சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பீகாரில் 11.51 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 1.36 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 13.18 சதவீதம், ராஜஸ்தானில் 14 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 9.85 சதவீதம், மேற்கு வங்கத்தில் 16.56 சதவீதம், ஜார்க்கண்டில் 13.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

11 மணி நிலவரம் : பீகார் - 20.74%, ஜம்மு காஷ்மீர் - 6.06%, மத்திய பிரதேசம் - 25.68%, ராஜஸ்தான் - 29.32%, உ.பி - 22.46%, மேற்கு வங்கம் - 33.16%, ஜார்க்கண்ட் - 29.49%

1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு மத்திய பிரதேசம்-31.46 %, ராஜஸ்தான் 33.82%, உத்தரபிரதேசம் 26.53%,மேற்கு வங்காளம் 39.55%,ஜார்கண்ட் 37.24 % பீகார் 24.49%, ஜம்மு காஷ்மீர் 6.54%

மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.56% வாக்குகள் பதிவாகி இருந்தன.

3 மணி நிலவரம் : பீகார் - 44.08%, ஜம்மு காஷ்மீர் - 15.34%, மத்திய பிரதேசம் - 53.37%, ராஜஸ்தான் - 50.39%, உ.பி - 44.79%, மேற்கு வங்கம் - 62.79%, ஜார்க்கண்ட் - 58.63%.

தலைப்புச்செய்திகள்