Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 44 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு

மார்ச் 24, 2022 11:02

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 74பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று  முன்தினம் 48பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று (மார்ச் 23 ம் தேதி) பாதிப்பு 44 ஆக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 30,455மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 44பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,534ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,53,27,953 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

கோவிட் உறுதியானவர்களில் 20 பேர் ஆண்கள், 24 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,15,004 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 14,37,492ஆகவும் அதிகரித்து உள்ளது. 74பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,004 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் பாதிப்பு காரணமாக  உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( மார்ச் 22 ம் தேதி) 18 ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 23 ம் தேதி) 16ஆக குறைந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்