Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாக்சர் மோடியின் முதல் குத்து மூத்த தலைவரான அத்வானிக்குதான்: ராகுல்காந்தி

மே 06, 2019 01:05

புதுடெல்லி; பிவானி தொகுதியில்  நடைபெற்ற பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது.நரேந்திர மோடி, 56 இன்ஞ்ச் மார்புடன் ஒரு குத்துச்சண்டை வீரராக விவசாயிகளின் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக போரிட களத்தில் இறங்கினார். அப்போது அவரது பயிற்சியாளர் அத்வானி மற்றும் நிதின் கட்கரி போன்ற அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்நிலையில், மோடியும் அந்த குத்துச்சண்டை களத்தில் இறங்கிய உடன் அவரது முதல் குத்து (பஞ்ச்) மூத்த தலைவரான அத்வானியை அவமதிக்கும் விதமாக அவர் மீது தான் விழுந்தது. அதற்கடுத்த குத்துகளின் மூலம் சிறு, குறு வணிகர்களை (ஜிஎஸ்டி) ஒழித்துக்கட்டினார் என்று விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக அத்வானியை ஓரங்கட்டுவதில் தான் இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்தார்.

ராகுல் பிரசாரம் செய்யும் பிவானி தொகுதி நாட்டின் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களை உருவாக்கும் இடமாகும். குறிப்பாக இந்தியாவில் குத்துச்சண்டை போட்டிகளில் உலகளவில் பல பதக்கங்கள் வென்று பெயர் பெற்ற விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் துவக்கம் முதல் பயிற்சி பெற்ற களமாகும்.  விஜேந்தர் சிங், டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்ப்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்