Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

மார்ச் 28, 2022 11:53

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,567 பேர் நலம்பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று பாதிப்பு 1,421 ஆக இருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக 1,500-க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.29 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.26 சதவீதம் ஆகவும் பதிவாகி உள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையும் நேற்று பெருமளவில் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோனா பாதிப்பால் எந்த உயிரிழப்பும இல்லை. அதேநேரம் விடுபட்ட 25 மரணங்கள் நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இதுதவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, இமாச்சலபிரதேசம், அரியானா, சிக்கிமில் தலா ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். இதனால் மேலும் 31 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,035 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,567 பேர் நலம்பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக உயர்ந்தது.

இதன்மூலம் குணமடைந்தோர் சதவீதம் 98.75 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,859 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 328 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 4,20,842 டோஸ்களும், இதுவரை 183 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,32,389 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 78.73 கோடியாக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்