Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒடிசாவில் வருகிற 20ந்தேதி நீட் தேர்வு; தேசிய தேர்வுகள் முகமை

மே 06, 2019 01:06

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர்.  இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.  இந்நிலையில், ஒடிசாவில் பானி புயலால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

பானி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கடந்த மே 3ந்தேதி கரையை கடந்தது.  பானி புயல் காரணமாக ஒடிசாவில் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வருகிற 20ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இன்று அறிவித்து உள்ளது.

தலைப்புச்செய்திகள்