Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விரக்தியடைந்த பா.ஜனதா எங்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறது: மாயாவதி

மே 06, 2019 01:16

சனிக்கிழமையன்று பிரதாப்கார்க்கில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கையில், சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியிடம் மென்மையாக நடந்துக்கொண்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியை கடுமையாக எதிர்த்தது. 

இப்போது அமைந்துள்ள கூட்டணியால் சமாஜ்வாடிக்குதான் பலன் கிடைத்துள்ளது. இப்போது சமாஜ்வாடியும், காங்கிரசும் எப்படி மாயாவதியிடம் விளையாடுகிறது என்பதை அவர் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

இதற்கு பதிலளித்துள்ள மாயாவதி, விரக்தியடைந்த பா.ஜனதா எங்களுடைய கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.யில் இன்றும் 5-ம் கட்டத்தேர்தலில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 6 மற்றும் 7-ம் கட்ட தேர்தலின் போது உ.பி.யில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மாயாவதி ஞாயிறு அன்று பேசுகையிலும், சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி தொடரும் என்றார். அகிலேஷ் யாதவ் பேசுகையிலும், பிரதமர் மோடி தவறாக வழிநடத்துகிறார் என்றார்

தலைப்புச்செய்திகள்