Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனிமேல் இந்து பண்டிதர்களை யாராலும் வெளியேற்ற முடியாது: ஆர்எஸ்எஸ் தலைவர்

ஏப்ரல் 04, 2022 12:45

ஜம்மு: கடந்த 1990-ம் ஆண்டில் காஷ்மீர் இந்து பண்டிதர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. சுமார் 8 லட்சம் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி பஞ்சாப், டெல்லியில் அகதிகளாக குடிபெயர்ந்தனர்.

இதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் காஷ்மீர் பண்டிதர்களின் வலியை நாடு முழுவதும் உணர செய்துள்ளது.

ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்த திரைப்படத்தை குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. இது காஷ்மீர் பண்டிதர்களின் வலியை உலகறிய செய்துள்ளது. இந்தத் திரைப்படம் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்துள்ளது.

இந்து பண்டிதர்கள் விரைவில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்புவார்கள் என்று நம்பு கிறேன். அடுத்த ஆண்டுக்குள் அவர்கள் காஷ்மீரில் குடியேற வேண்டும். காஷ்மீரில் இருந்து இனிமேல் இந்து பண்டிதர்களை யாராலும் வெளியேற்ற முடியாது. அவர்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

தலைப்புச்செய்திகள்