Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விலை உயர்வால் 10 சதவீதம் குறைந்த மதுவிற்பனை

ஏப்ரல் 05, 2022 11:43

சென்னை: தமிழகம் முழுவதும் 10 சதவீத மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு சாதாரண மது பானங்கள் தான் அதிகளவு விற்பனையாகிறது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை கடந்த மாதம் 7-ந் தேதி உயர்த்தப்பட்டது. ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாதாரண ரக மதுபானங்கள் முதல் உயர் ரக மதுபானங்கள் வரை விலை கூடியதால் விற்பனை சரிந்துள்ளது. ஒவ்வொரு முறை விலை உயர்த்தப்படும் போதும் ஒரு வாரம் விற்பனை குறைவாக இருக்கும்.

பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி விடும். ஆனால் இந்த முறை விலையேற்றத்திற்கு பிறகு குறைந்த விற்பனை அதிகரிக்க வில்லை.

தமிழகம் முழுவதும் 10 சதவீத மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு சாதாரண மது பானங்கள் தான் அதிகளவு விற்பனையாகிறது.

நடுத்தரம் மற்றும் உயர் ரக மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பதாக விற்பனையாளர்கள் தெரி விக்கின்றனர். சாதாரண மது வகைகள் தற்போது குவாட்டர் பாட்டில் ரூ.150 முதல் ரூ.200 வரை உள்ளது. அந்த வகைகளுக்கு நடுத்தர பிரிவினரும் மாறிவிட்டனர்.

உயர் ரக மதுபானங்களை அருந்தக்கூடியவர்கள் நடுத்தர ரகத்திற்கு மாறி யுள்ளனர். ஆனால் கடை களில் உயர் ரக மதுபானங் கள்தான் தாராளமாக கிடைக்கின்றன. குறைந்த ரக மதுபானங்கள் தாராளமாக கிடைப்பது இல்லை என்று மதுபிரியர்கள் ஆதங்கப்படு கின்றனர்.

மேலும் சாதாரன மதுபானங்கள் குறைவாக வும் உயர் ரக மதுபானங்கள் அதிகமாகவும் கிடைப் பதாக கூறப்படுகிறது. மது பானங்கள் விலை உயர்வ தோடு கடைகளில் கூடுதல் ரூ.10, ரூ.20 வசூலிக்கப்படுவ தால் மது அருந்துவதற்கே பெரும் தொகை செலவாகி விடுவதால் மது நுகரும் அளவை குறைத்து இருப்பதும் தெரியவருகிறது.

முன்பு தினமும் குவாட்டர் குடித்தவர்கள் தற்போது 2 நாளுக்கு ஒருமுறை குவாட்டர் குடிக்கும் பழக் கத்திற்கு மாறி உள்ளனர். அதே நேரத்தில் பீர் மது பானங்கள் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

கோடை வெயில் கொளுத்தி வருவதால் பீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஜில் பீர் வகை களுக்கு தேவை அதிகரித்து வருவதால் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

மண்டையை பிளக்கும் உச்சி வெயிலை தாங்க முடியாமல் ‘ஹாட்’ மதுபானங்களை தவிர்த்து பீர் மதுபானங்களுக்கு பலர் மாறியுள்ளனர். இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதி களிலும் ‘பீர்’ விற்பனை உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்