Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர்

ஏப்ரல் 10, 2022 11:09

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் அனுாப் கேசரி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார்.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. ஆம் ஆத்மி, டில்லியை அடுத்து பஞ்சாபிலும் ஆட்சி அமைத்துள்ளதால், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் தீவிரமாக களமிறங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.இந்நிலையில், ஆம் ஆத்மியின் மாநில தலைவர் அனுாப் கேசரி, நேற்று பா.ஜ.,வில் இணைந்தது, அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்த அனுாப் கேசரி கூறியதாவது:ஹிமாச்சலில் ஆம் ஆத்மி கட்சிக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக தீவிரமாக உழைத்தோம்.

ஆனால், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்களை மதிக்கவில்லை. மண்டியில் ௭ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கெஜ்ரிவால், எங்களை மதிக்காமல், தன்னையும், பஞ்சாப் முதல்வர் மானையும் முன்னிறுத்துவதில் தான் ஆர்வம் காட்டினார்

. இது பெரும் ஏமாற்றத்தை தந்ததால் தான், பா.ஜ.,வில் இணைந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலர் சதீஷ் தாக்குர், உனா மாவட்ட தலைவர் இக்பால் சிங் ஆகியோரும் பா.ஜ.,வில் இணைந்தனர். பா.ஜ., பயப்படுகிறது

இது பற்றி டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் கூறுகையில், ''தேர்தல் நெருங்குவதால், மக்களை சந்திக்க பா.ஜ., பயப்படுகிறது. ''மக்களுக்கு சரியாக பணியாற்றியிருந்தால், அடுத்த கட்சியிலிருந்து ஆட்களை இழுக்க வேண்டிய அவசியம், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டு இருக்காது,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்