Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு

ஏப்ரல் 10, 2022 11:28

புதுடெல்லி: நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இன்று முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், 'பூஸ்டர் டோஸ்' செலுத்தப்பட உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் விலை 225 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளும்; 12 - 14 வயதுடைய சிறார்களுக்கு, 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியும், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன.நாடு முழுதும்இரண்டு டோஸ்கள் செலுத்தியோருக்கு, ஒன்பது மாத இடைவெளிக்குப் பின், பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.

இதன்படி, மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று முதல், நாடு முழுதும் உள்ள தனியார் தடுப்பூசி முகாம்களில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. 'பாரத் பயோடெக்'இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் பூஸ்டர் டோஸ்களுக்கான விலைகளை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் 'பாரத் பயோடெக்' நிறுவனங்கள் குறைத்து உள்ளன.கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு பூஸ்டர் டோஸ் விலை, 600 ரூபாயில் இருந்து, 225 ரூபாயாக குறைக்கப்படுவதாக, சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா அறிவித்துள்ளார்.

இதேபோல், “கோவாக்சின் தடுப்பூசியின் விலை, 1,200 ரூபாயில் இருந்து, 225 ரூபாயாக குறைக்கப்படுகிறது,” என, 'பாரத் பயோடெக்' இணை நிறுவனர் சுசித்ரா எல்லா அறிவித்தார்.இதற்கிடையே, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:'கோவின்' இணையதளத்தில், பயனாளிகள் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், அதில் அவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 150 ரூபாய்தடுப்பூசி செலுத்திக் கொள்வோரிடம் இருந்து, அதன் விலையை தவிர, சேவைக் கட்டணமாக அதிகபட்சமாக 150 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

முதல் இரண்டு டோஸ்களுக்கு, எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வு கூறுவது என்ன?ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனமும் சேர்ந்து, சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தின. இதில், கோவாக்சின் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்