Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

ஏப்ரல் 12, 2022 11:18

ஆண்டிபட்டி : மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏப்., 16 கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து நேற்று மாலை ஆற்றின் வழியாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் 70.11 அடி வரை உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. சில மாதங்களாக இருப்பில் உள்ள நீர் தொடர்ந்து குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் குறைந்தது. நேற்று மாலை அணை நீர்மட்டம் 68.54 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 35 கனஅடி.

மதுரை சித்திரை திருவிழாவில் ஏப்., 16 கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக வைகை அணையிலிருந்து நேற்று மாலை வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நிர்வாக பொறியாளர் அன்புசெல்வம், உதவி செயற்பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் முன்னிலையில் அணையின் கீழ் மதகு மற்றும் பவர் ஹவுஸ் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முதல் ஏப்., 16 வரை மொத்தம் 216 மி.கன அடி வெளியேற்ற இருப்பதாகவும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீருக்காக வழக்கம் போல் வினாடிக்கு 72 கனஅடி வெளியேறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்