Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயேசு கிறிஸ்துவின் சேவை மற்றும் சகோதரத்துவம் மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம்: பிரதமர் மோடி

ஏப்ரல் 15, 2022 11:50

புதுடெல்லி: இயேசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் தியாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நாளாக இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு துக்கம் மற்றும் தவம் செய்யும் நாளாகும்.

இதைமுன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் தியாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நினைவுக் கூர்ந்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் தியாகங்களை நினைவு கூறுகிறோம். அவருடைய சேவை மற்றும் சகோதரத்துவம் பல மக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்