Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமன் ஜெயந்தி: பிரதமர் மோடி வாழ்த்து

ஏப்ரல் 16, 2022 12:29

புதுடெல்லி: அனுமன் வலிமை, தைரியம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக இருக்கிறார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்து மதத்தினர் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, அனுமன் வலிமை, தைரியம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக இருக்கிறார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அனுமனின் ஆசீர்வாதத்துடன் அனைவரின் வாழ்வும் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவால் நிரப்பப்படட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

தலைப்புச்செய்திகள்