Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழின் தொன்மையை இந்திய மக்கள் அறியவே ஹிந்தி: தங்கம் தென்னரசு விளக்கம்

ஏப்ரல் 18, 2022 10:51

சென்னை : 'தமிழின் தொன்மையையும், தமிழ் சமூக பண்பாட்டையும், இந்திய அளவில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இதுதொடர்பான ஆய்வு முடிவுகள், பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன' என, தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'நாட்டில் உள்ள முதல்வர்களில் முதன்மையானவர்' என ஸ்டாலினை, அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் கூறுகின்றன. இதை கண்டு மனம் பொறுக்காமல், சொத்தை வாதத்தை துாக்கிக் கொண்டு, அறிக்கை வெளியிட்டு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குளிர்காய முற்பட்டு இருக்கிறார்.

'ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தியை பயன்படுத்துங்கள்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியவுடன், தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தன் நிலைப்பாட்டை, முதல்வர் உறுதிபட கூறினார்.

ஆய்வு முடிவுகள் இன்றைக்கு வீராவேசமாக அறிக்கை விடும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தனக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அமித் ஷா கருத்து குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, நழுவியதை மறந்து விட்டார். உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால், பழனிசாமியின் பாசாங்கு செயலை தான் பன்னீர்செல்வம் கண்டித்து இருக்க வேண்டும்.

தமிழின் தொன்மையையும், தமிழ் சமூக பண்பாட்டையும், இந்திய அளவில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இதுதொடர்பான ஆய்வு முடிவுகள், பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் பதிணென் கீழ்கணக்கு நுால்களில், திருக்குறளை தவிர்த்து மற்றவை, ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, 2019ல் அன்றைய முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்