Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடிய பாராட்டிய இளையராஜாவை அவமதிப்பதா?: ஜே.பி.நட்டா கண்டனம்

ஏப்ரல் 18, 2022 11:21

புதுடெல்லி: பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா?

இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறை.

கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்