Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளையராஜா கருத்தை விமர்சிப்பது தவறு: உதயநிதி ஸ்டாலின்

ஏப்ரல் 19, 2022 11:09

சென்னை: இளையராஜா கருத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உடற்பயிற்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட வளைய சுற்றுத்தர அமைப்புகளை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது 
அவரது சொந்த கருத்து ஆகும். இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று தலைவர்( மு.க.ஸ்டாலின்) சொல்லி விட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்