Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னராகிறார் எச். ராஜா?

ஏப்ரல் 20, 2022 11:05

சென்னை: பா.ஜ., தேசிய செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த தலைவர் எச். ராஜா, 64, கேரள கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசன், மணிப்பூர் கவர்னராக உள்ளார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எச். ராஜா இருவரையும் பா.ஜ., தலைமை சமீபத்தில் வரவழைத்து பேச்சு நடத்தியது. இவர்களில் ஒருவருக்கு கேரள கவர்னராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், எச். ராஜா முன்னிலையில் உள்ளார்.

தற்போது கேரள கவர்னராக உள்ள ஆரிப் முகமது கான், வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என, தெரிகிறது. இதற்கிடையே தமிழக கவர்னர் ரவி, இன்று டில்லி செல்கிறார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவர் சந்திக்கிறார்.

தலைப்புச்செய்திகள்