Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல் எச்சரிக்கை: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

ஏப்ரல் 20, 2022 11:13

புதுடெல்லி: மீண்டும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையடுத்து, 'முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசம், அரியானா, மஹாராஷ்டிரா , மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டில்லி யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதம், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இம்மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமக்கப்பட வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்

தலைப்புச்செய்திகள்