Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.544 குறைந்தது

ஏப்ரல் 20, 2022 11:51

சென்னை: தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.744 குறைந்திருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் மிகவும் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது.

 கடந்த வாரம் 11-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவாக ரூ.39,568-க்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 14-ந்தேதி (வியாழக்கிழமை) தங்கம் விலை பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.40,112-க்கு விற்கப்பட்டது. நேற்று முன் தினம் அது ரூ.40,400 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.40,200 ஆக விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று பவுனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.39,656-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.5,025-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4,957-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.73.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.73,500-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.744 குறைந்திருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்