Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2020-21-ம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள்

ஏப்ரல் 22, 2022 11:45

புதுடெல்லி: 2020-21-ம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன.

தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம் வழங்கி வருகின்றன.

 அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தும் நிதியின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதே இவற்றின் நோக்கம் ஆகும்.

இந்த நிலையில் ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற நன்கொடை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மொத்தம் உள்ள 23 தேர்தல் அறக்கட்டளைகளில் 16 அறக்கட்டளைகள் கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வரவு-செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அவற்றில் 7 அறக்கட்டளைகள் மட்டுமே தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை அளித்துள்ளன.

2020-21-ம் நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ரூ.258.49 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் 99.98 சதவீதம் அதாவது ரூ.258.43 கோடி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பா.ஜனதா மட்டும் 82 சதவீத தொகையான ரூ.212.05 கோடியை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதாதளம் 10.45 சதவீத தொகையான ரூ.27 கோடியை பெற்றுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க., ஆம்ஆத்மி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், லோக்ஜனசக்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, லோக்தந்திரிக் ஜனதாதளம் ஆகிய 10 கட்சிகளும் சேர்ந்து ரூ.19.38 கோடியை பெற்றுள்ளன.

தலைப்புச்செய்திகள்