Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நாளை தொடக்கம்

ஏப்ரல் 24, 2022 12:28

திருப்பூர்: ஹால்டிக்கெட் மாணவர்களின் தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமையாசிரியர்கள் கூறினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மே 5-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மே9-ந்தேதி துவங்கி, 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 6-ந்தேதி முதல், 30-ந் தேதி வரையும் நடக்கிறது. 

தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக உள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்களை அந்தந்த பள்ளிகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 10-ம்  வகுப்பில் 31 ஆயிரத்து 617 பேர், பிளஸ்-1 வகுப்பில் 27 ஆயிரத்து 520 பேர், பிளஸ்-2 வகுப்பில் 25 ஆயிரத்து 717 பேர் நடப்பாண்டு பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் மாணவர்களின் தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமையாசிரியர்கள் கூறினர்.

செய்முறைத்தேர்வுகள் நாளை முதல் முதல் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளன. இதற்காக வேதியியல், இயற்பியல், உயிரியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்களை பரிசோதித்து தயார்நிலையில் வைத்திருக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் இப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்