Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

27ம் தேதி அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ஏப்ரல் 25, 2022 12:24

சென்னை: அ.தி.மு.க., சார்பில், வரும் 27ம் தேதி சென்னையில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அ.தி.மு.க., தலைமை அறிக்கை: ஜெயலலிதா வழியில் இவ்வாண்டும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், 27ம் தேதி சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில், இப்தார் விருந்து வழங்க உள்ளனர். 
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய பிரமுகர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்