Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக நிகழ்ச்சியில் பொழிந்த பண மழை

ஏப்ரல் 25, 2022 12:27

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன் 500 ரூபாய் நோட்டுகளை மேடையில் தூவினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தண்டுபத்து கிராமத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி எம்.பி., கனிமொழி பங்கேற்றார். தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ,கட்சி நிர்வாகிகள் 100 பேருக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசளித்தார். மேடையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.

எம்.ஜி.ஆர்.,நடித்த வேட்டைக்காரன் படத்தில் 'உன்னை அறிந்தால் நீ உன்னை ...' என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடினார். அப்போது தி.மு.க., நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் கட்டில் இருந்து நோட்டுகளை எடுத்து அமைச்சர் மீது தூவினார். இசை நிகழ்ச்சி மேடையில் விழுந்த ரூபாய் நோட்டுகளை இசைக்கலைஞர்கள் ஆர்வமாக எடுத்தனர்.

தொடர்ந்து அசைவ விருந்து நடந்தது. மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் நடன நிகழ்ச்சிகளில் இவ்வாறு ரூபாய் நோட்டுகளை வீசுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்