Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை

ஏப்ரல் 26, 2022 10:54

சென்னை: சென்னையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. அதன்படி, முக கவசம் அணியாதவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.

சென்னையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் மெல்ல தலைதுாக்க துவங்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி., விடுதியில் தங்கி படிக்கும் மூன்று மாணவியருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அது படிப்படியாக உயர்த்து, 78 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு, தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயரும் நிலை உள்ளது.சென்னை மாநகரின் பிற பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, வரும் ஜூன், ஜூலை மாதங்களில், நான்காம் அலை கொரோனா பரவக்கூடும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுஉள்ளது.இதைதொடர்ந்து, சென்னையில், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்ள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், ''தமிழக அரசு உத்தரவுப்படி, சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.''முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். ''எனவே, தங்களையும், தங்கள் வாயிலாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவாமல் இருக்க அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்