Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகின் 5வது பெரிய பணக்காரர் கவுதம் அதானி: போர்ப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

ஏப்ரல் 26, 2022 11:07

புதுடெல்லி: அதானி குழும தலைவர் கவுதம் அதானி உலகின் 5வது பணக்கார நபராகி உள்ளார் என போர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

போர்ப்ஸ் செய்தி நிறுவனம் உலக அளவில் பணக்காரர்களாக உள்ள நபர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான பட்டியலில், முதலிடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவரான எலான் மஸ்க் (26 ஆயிரத்து 970 கோடி அமெரிக்க டாலர்) , இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (17 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்), மூன்றாம் இடத்தில் பிரான்ஸ் நாட்டின் பெர்னார்ட் அர்னால்ட் (16 ஆயிரத்து 790 கோடி அமெரிக்க டாலர்), நான்காம் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (13 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்), ஐந்தாம் இடத்தில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

91 வயது வாரன் பஃபே 12 ஆயிரத்து 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் பின்னுக்கு தள்ளப்பட்டார். அதானியின் சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 370 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இதையடுத்து இந்தியாவின் மிக பெரும் பணக்காரராக அதானி உள்ளார். 2வது மிக பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை (10 ஆயிரத்து 470 கோடி அமெரிக்க டாலர்) விட ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலர் சொத்து அதானியிடம் அதிகம் உள்ளது.

தலைப்புச்செய்திகள்