Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டன: ராகுல்

ஏப்ரல் 27, 2022 03:49

புதுடெல்லி: பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், வேலையில்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அரசின் மீது தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். சமீப காலமாக பணவீக்கம், வேலையிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, மத நல்லிணக்கம் போன்றவைகள் குறித்து பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான மத்திய அரசையும் விமர்சித்து வந்தார். அந்த வகையில் தற்போது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், அதனை சரி செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் தெரிவித்ததாவது: 7 உலக பிராண்டுகள், 9 தொழிற்சாலைகள், 649 டீலர்ஷிப்புகள், 84,000 வேலைகள், இவை அனைத்தும் மிக எளிதாக இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டன. பிரதமர் மோடி அவர்களே, இந்தியாவில் வெறுப்பும், உற்பத்தியும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்