Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் கிராம மக்களே ஒன்று சேர்ந்து தேர்த்திருவிழாவை நடத்தி உள்ளனர்: அமைச்சர் விளக்கம்

ஏப்ரல் 27, 2022 03:58

சென்னை: தஞ்சாவூரில் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தேர்த்திருவிழா நடப்பது குறித்து கிராம மக்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறியுள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அளித்த விளக்கம்: திருவிழா நடப்பது குறித்து அரசுக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவிக்கவில்லை. கிராம மக்களே ஒன்று சேர்ந்து தேர்த்திருவிழாவை நடத்தி உள்ளனர். களிமேடு பகுதியில் நடந்தது தேர் திருவிழாவும் அல்ல. அது தேரும் அல்ல. அது சப்பரம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதனிடையே, தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுவதாகவும், விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு குழு அமைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்