Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளறுபடிகளை தவிர்க்க மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் ஜாமர் கருவி பொருத்தவேண்டும்: அசோக் சவான்

மே 07, 2019 07:56

மும்பை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நேற்று தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சென்று சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.. வாக்குப்பதிவு எந்திரத்தில் மொபைல் போன், வை-பை போன்றவற்றாலும் குளறுபடி செய்ய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தவிர்க்க இணைய அலைவரிசைகளை தடுக்கக்கூடிய ஜாமர் கருவியை வாக்குப்பதிவு எந்திரம் உள்ள அறைகளில் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ஜாமர் கருவியை பொருத்த தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளேன்.

மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றிலும் முழுமையாக அனைத்து நடைமுறைகளையும் முடித்த பின்பே அடுத்து சுற்றுக்கு செல்லவேண்டும். மறு எண்ணிக்கை தேவைப்பட்டால் உடனடியாக செய்யவேண்டும்.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு விவிபாட் எந்திரத்தில் உள்ள வாக்காளர் அத்தாட்சி சீட்டை கைகளால் எண்ணி சரிபார்க்கவேண்டும். அந்த விவிபாட்டை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்