Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 7,306 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்

ஏப்ரல் 29, 2022 01:04

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், 22 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7,306 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளன. ஒரு பணியிடத்துக்கு சுமார் 300 பேர் போட்டியிடுகின்றனர். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 7,306 பணியிடங்களுக்கான குரூப்.-4 தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டார். அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும் என்றும் அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ www.tnpscexamsinஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை ஒரே நாளில் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 21 லட்சம் பேர் விண்ணப்பம் இந்த பணிகளுக்கு கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு என்று இருப்பதால், முதல் ஒரு வாரத்திலேயே சுமார் 7 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகின. கடந்த 24ஆம்தேதி நிலவரப்படி, இந்த பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்றிரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 22 லட்சம் பேர் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 இடத்திற்கு 300 பேர் போட்டி விண்ணப்ப பதிவு செய்தவர்களின் புள்ளிவிவரங்களுடன் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு பணியிடத்துக்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. கலந்தாய்வு எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். 
இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு helpdesk@tnpscexams.in மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்