Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஏப்ரல் 30, 2022 12:54

தேனி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து அவர்  கூறியதாவது:
 
தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.

* 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

* இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

* தமிழகத்தில்  உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம்.

* கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

* பெரிய குளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

* மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை; விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை.

* எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை.

* 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்