Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுப்ரீம் கோர்ட் அருகே 144 தடை

மே 07, 2019 09:44

புதுடில்லி: பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டை ஒட்டிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக நீதிபதி பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்டு விசாரைணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு எவ்வித முகாந்திரமும் இல்லை என புகாரை நிராகரித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வக்கீல்களில் ஒரு தரப்பினர் இந்த உத்தரவை கண்டித்து வருகின்றனர். முறையாக விசாரணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 50 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

மகளிர் நல ஆர்வலர்கள்

இவர்களுடன் மகளிர் நல ஆர்வலர்களும் பங்கேற்றனர். கோர்ட் வாசல் அடைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். போராட வந்தவர்களையும் பத்திரிகையாளர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்