Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசு மீது பழி போட்டு மோதும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிவுரை

மே 01, 2022 04:47

சென்னை: கொரோனா காலத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

த.மா.கா. சார்பில் மே தின விழா இன்று சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமை தாங்கினார். தொழிற்சங்க பொது செயலாளர் கே.ஜி.ஆர். மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க தலைவர் இளவரி துவக்க உரையாற்றினார்.

விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

தொழிலாளர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதில் த.மா.கா. என்றும் முன்னணியில் நிற்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் வருவாய்த்துறை கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளது. அதை தளர்த்தி தொழிலாளர்கள் உரிமைகளை பெறுவதை எளிதாக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. சர்வதேச சந்தை விலை நிலவரம் மற்றும் கொரோனா காலத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு உணவு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது.

எல்லாவற்றுக்கும் மத்திய அரசை குறை சொல்லும் தமிழக அரசு சொத்து வரியை ஏன் உயர்த்தியது? பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். அதை நிறைவேற்றாதது ஏன்?

மத்திய அரசு மீது பழி போட்டு மோதும் போக்கை கைவிட்டு இணக்கமாக செயல்படுவதே சிறந்த அரசுக்கு உதாரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்