Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

மே 02, 2022 10:45

பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை துவக்கியுள்ளார். ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி அதன் தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கோல்சை இன்று (மே 2) சந்தித்து பேச உள்ளார். பின்னர் 3, 4ம் தேதிகளில் டென்மார்க்கில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடேரிக்சனை சந்தித்து பேசுகிறார். பின், வட ஐரோப்பிய மற்றும் வடக்கு அட்லான்டிக் பகுதியில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும், 'நார்டிக்' கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதற்காக நேற்றிரவு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார். அங்குள்ள பிராண்டன்பெர்க் விமான நிலையத்தில் அந்நாட்டு அரசின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனி பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்