Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவரும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்: பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து

மே 03, 2022 11:33

புதுடில்லி:  உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரபு நாடுகள் இந்தியாவில் முக்கிய நகரங்களில் கூட்டுத்தொழுகையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

ரமலான் பண்டிகைக்கு பலரும் வாழத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் ; அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! இந்த ரமலான் நன்நாளில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் மேம்படட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

இதுபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்