Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி பதிவு எண்ணுடன் சரக்கு லாரி

மே 03, 2022 05:33

புதுச்சேரி: தொடர்ந்து அந்த லாரி அதே பகுதியில் நின்றுக்கொண்டி ருந்ததால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த லாரியின் பதிவு எண் கோவையை சேர்ந்த ஒருவரின் லாரியின் பதிவு எண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்த லாரி தன்னிடம் இருப்பதாகவும், தன்னுடைய லாரியின் பதிவு எண்ணை போலியாக தயாரித்து மற்றொரு லாரியில் பொறுத்தி பயன் படுத்தி வருவதாக  தெரிவித்தார்.

இதையடுத்து சுங்கசாவடிகளில் ஆய்வு செய்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த லாரி மொரட்டாண்டி சுங்கசாவடியை கடந்து புதுவைக்கு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை போலீசார் பறிமுதல்  செய்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே சென்னை அய்யனாவரத்தை சேர்ந்த சரண் என்பவர் அந்த லாரிக்கு உரிமை கொண்டாடி அந்த லாரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு லாஸ்பேட்டை போலீசாரிடம் முறையிட்டார்.

அதற்கு போலீசார் அந்த லாரிக்குண்டான ஆவணங்களை சமர்பித்தால் லாரியை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதனையேற்ற சரண் ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு சரண்  லாரியை எடுத்து செல்ல வரவில்லை. எனவே அந்த லாரி திருட்டு லாரியாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்