Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை உயர்வு

மே 04, 2022 01:28

சென்னை:  க்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.

தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4810-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38480-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41672-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.67.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.67,000 ஆக உள்ளது

தலைப்புச்செய்திகள்