Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வில் விலக்கு: ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் கவர்னர்

மே 04, 2022 03:55

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து சட்டசபையில் இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி, கவர்னரை நேரில் சந்தித்து முதல்வர் வலியுறுத்தினார். இந்த மசோதா தொடர்பாக, ஜனாதிபதியிடமும், மத்திய அரசிடமும் எம்.பி.,க்கள் குழுவினர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். இதனை கவர்னரின் செயலர், தொலைபேசி மூலம் தன்னிடம் தகவல் தெரிவித்தார் என்று அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்