Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு ஜப்பான் ரூ.1500 கோடி நிதி

மே 05, 2022 01:12

மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2019 ஜன.,27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடை ரூ.1,464 கோடியில் இருந்து, ரூ.2,000 கோடியாக உயர்த்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையில் நிதியுதவி பெற திட்டமிட்டு, முழு திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டது. இதில், 85 சதவீதம் நிதி வழங்க ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது ரூ.1,500 கோடி நிதியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. மீதி தொகை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தோப்பூரில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது ரூ.1,500 கோடி நிதியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. மீதி தொகை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தோப்பூரில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்