Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டம்

மே 05, 2022 05:26

மதுரை மாவட்டத்தில் 650 கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. கோழி வளர்க்கும் விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் குஞ்சுகளை பெற்று பராமரித்து வழங்குகின்றனர். இதற்காக கிலோவுக்கு ரூ.6.50 பெறுகின்றனர்.
இத்தொகையை உயர்த்தி வழங்க தனியார் நிறுவனங்களை அழைத்துப் பேச வலியுறுத்தி கலெக்டர் முதல் அமைச்சர் வரை மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை இல்லாததால், நேற்று முதல் கோழிக் குஞ்சுகளை நிறுவனங்களிடம் பெற மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி: கோழி வளர்ப்புக்கான கரிமூடை, தென்னம் மஞ்சு, மின்சாரம், தண்ணீர் உட்பட செலவு அதிகரித்துவிட்டது. இதனால் வட்டி கூட கட்ட இயலவில்லை. ஒரேநாளில் கோழியை வாங்கி விற்பனை செய்வோர் கிலோ ரூ.120க்கு பெற்று ரூ.180 முதல் ரூ.220 விற்கின்றனர்.
அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. ஆனால் 40 நாட்களாக வளர்க்கும் எங்களுக்கு எவ்வித லாபம் இல்லை. ஒரு கிலோவுக்கு ரூ.12 - ரூ.15 வரை நிறுவனங்கள் தரவேண்டும். இதற்கான பேச்சு வார்த்தை நடத்தும் வரை இப்போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினார்.கோழிக்குஞ்சு எடுப்பதை நிறுத்தியுள்ளதால் விற்பனைக்கு அனுப்புவதும் விரைவில் குறையும். இதன்மூலம் கோழி இறைச்சி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்