Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லைப் பாதுகாப்பு படையில் ஆள் பற்றாக்குறை

மே 07, 2022 12:13

அகர்தாலா: எல்லைப் பாதுகாப்பு படையில் ஆள் பற்றாக்குறை மற்றும் பயிற்சியின் தரம் குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, துணை ராணுவப்படை, உயர் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கை:பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையின் பாதுகாப்பு பணிகளுக்காகத்தான் எல்லைப் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. பலர் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின் தரமும் குறைந்து விட்டது. எல்லைப் பாதுகாப்பு படையினர், முப்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி செய்வர். சமீபகாலமாக அது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் எல்லைப் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இரண்டு கோடி பேர் சட்டவிரோதமாக நம் நாட்டில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்