Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நடை பயண பிரசாரம்

மே 08, 2019 05:11

கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று இரண்டாம் நாளாக மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பாலத்துறையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் தவுட்டுப்பாளையம் சென்ற மு.க.ஸ்டாலினை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

நடைபயணமாகச் சென்றபடி, கிராம மக்களை சந்தித்து செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

மு.க.ஸ்டாலினுடன் பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கனிமொழி என மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். பின்னர் கடை ஒன்றில், மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
 

தலைப்புச்செய்திகள்