Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கைதிகள் முன்கூட்டியே விடுதலை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மே 16, 2022 11:26

புதுடில்லி : 'குற்றம் நடந்த மாநிலத்தின் கொள்கையின் அடிப்படையில், குற்றவாளிக்கான தண்டனை குறைப்பு அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது போன்றவை முடிவு செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு, மும்பை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர், தனக்கு முன்கூட்டியேவிடுதலை வழங்க குஜராத்அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவைவிசாரித்த நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவு: குற்றம் குஜராத்தில் நடந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக வழக்கு விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.விசாரணை நடந்துகுற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு, அவர்குஜராத் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.குஜராத் அரசின் கொள்கைப்படி, பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த மனுதாரர் முன்கூட்டியே விடுதலை பெறும்தகுதியை பெறுகிறார்.

எனவே, தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை போன்ற விவகாரங்களில், குற்றம் நடந்தமாநிலத்தின் கொள்கையின்அடிப்படையில் முடிவுகள்எடுக்கப்பட வேண்டும்.விசாரணை நடந்தமாநிலத்தின் கொள்கையைபின்பற்றக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்