Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் இந்திய மீனவர்கள் 34 பேர் கைது

மே 08, 2019 05:33

கராச்சி: அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக  இந்திய மீனவர்கள் 34 பேரை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.  மீனவர்கள் பயன்படுத்திய 6 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜூடிசியல் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழாண்டில், பாகிஸ்தான் கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்வது இதுதான் முதல் முறையாகும். 

கடந்த மாதம், இந்திய மீனவர்கள் 250 பேர் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்தது. கடல் எல்லைகளை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பங்கள் இல்லாததால், இந்தியா, பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது, எல்லைகளை தவறுதலாக கடந்துவிடுகின்றனர். அவ்வாறு கடக்கும் மீனவர்களை இரு நாட்டு கடற்படைகளும் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக தொடர்கிறது.

தலைப்புச்செய்திகள்