Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாமலையை பாராட்டியதால் நெடுமாறன் மீது பாயும் தி.மு.க.,

மே 18, 2022 12:26

சென்னை:முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாராட்டியதால், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனை, தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வினர், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விட, பா.ஜ.,வையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சென்னையில் நெடுமாறன், ஈழத் தமிழ் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்த, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் அண்ணாமலை பங்கேற்றார். இதனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.
இந்நிகழ்ச்சியில் பேசிய நெடுமாறன், 'அண்ணாமலையை ஐ.பி.எஸ்., என்று கேள்விப்பட்டேன். ஆனால், ஐ.எப்.எஸ்., அதிகாரியை போல, இலங்கை பிரச்னையை பற்றி தெளிவான புரிதலுடன்பேசினார். 'தமிழர், சிங்களர் வேறுபாடு இல்லாமல், இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி அள்ளி கொடுத்திருக்கிறார். மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர். பொறுமையும், பெருந்தன்மையும் அண்ணாமலைக்கு அதிகம் உள்ளது' என்று பாராட்டினார்.

இதனால், கடுப்பான தி.மு.க.,வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் நெடுமாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராஜ்யசபா தி.மு.க., - எம்,பி.,யும், அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் செயலருமான அப்துல்லா, 'தமிழ் தேசியம் என்பது, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கிய செல்லக் குழந்தை என்பது உறுதியாகி விட்டது' என்று விமர்சித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்