Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அணுஉலையுடன் சிவலிங்கத்தை ஒப்பிட்ட மஹூவா மொய்த்ரா

மே 19, 2022 11:49

கியான்வாபி மசூதி சர்ச்சையில் கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் எம்.பி. வாட்ஸ் அப்பில் வலம் வந்த மீமை எடுத்து பாபா அணு உலையையும், சிவலிங்கத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்தது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. ஒசுகானாவை சீல் வைத்து தொழுகைக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்களின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வரும் சூழலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மஹூவா மொய்த்ராவின் ட்வீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் அணு உலையின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அடுத்ததாக பாபா அணு உலை தோண்டப்படும் பட்டியலில் இருக்காது என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற மீம் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் பரவிவர அதை மஹூவா மொய்த்ரா எடுத்துக் கையாண்டது பரவலாக அதிருப்திய ஏற்படுத்தியுள்ளது. மஹூவா மொய்த்ரா இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக அவரை விமர்சித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்