Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பன்னீர்செல்வம் மகன் திடீர் சந்திப்பு

மே 19, 2022 11:49

சென்னை-அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மகனும், அக்கட்சி எம்.பி.,யுமான ரவீந்திரநாத்குமார், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று மாநில வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ரவீந்திரநாத்குமார், நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்த பின், முதல்வரை அவரது அறையில், பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் தனியாக சந்தித்து பேசினார்.

முதல்வருக்கு பாரதியார் கவிதைகள் புத்தகம் பரிசாக வழங்கினார். பின், முதல்வரிடம் அவர் அளித்த மனுவில், 'தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் பாராட்டுகள். 'தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் செயல்படும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும். போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்' என கேட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்