Tuesday, 25th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மே 19, 2022 12:31

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருப்பதி நேற்று 74,389 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,007 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்கு சுமார் 8 மணிநேரம் ஆகிறது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்