Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முட்டை விலை உயர்ந்தது

மே 19, 2022 02:11

நாமக்கல்: நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.50 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 12ம் தேதி ரூ.3.65 ஆக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, ஒரு வாரத்தில் ரூ.4.75 ஆனதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) :- சென்னை 4.90, பர்வாலா 4.22, பெங்களூர் 4.70, டெல்லி 4.48, ஹைதராபாத் 4.55, மும்பை 5.10, மைசூர் 4.85, விஜயவாடா 4.65, ஹெஸ்பேட் 4.30, கொல்கத்தா 5.35. பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.132 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 105 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்